செமயா இங்கிலீஷ் பேசி போலீசாரை திக்குமுக்காட வைத்த பழ வியாபாரி; வைரல் வீடியோ.!

செமயா இங்கிலீஷ் பேசி போலீசாரை திக்குமுக்காட வைத்த பழ வியாபாரி; வைரல் வீடியோ.!


Fruit seller speak fluent English to police man

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரைசா அன்சாரி என்ற பெண் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது கடையை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது சரளமாக  ஆங்கிலத்தில் பேசி போலீசாரை திக்குமுக்காட வைத்தார்.   

வியாபாரம் செய்யும் சந்தையை மூடிவிட்டீர்கள். பிழைப்பிற்காக தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்கிறோம். ஊரடங்கு என்ற பெயரில் இதையும் செய்யக் கூடாது என்று சொன்னால் நாங்கள் எப்படி வாழ்வது? வாழ்வாதாரத்திற்கு என்ன தான் வழி? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இடையிடையே இவர் பேசிய சரளமான ஆங்கிலம் அனைவரது கவனத்தையும் பெற்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையடுத்து தனியார் ஊடகம் ஒன்றின் சார்பில் அப்பெண்ணிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, ”நான் இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆராய்ச்சி மாணவி. கொல்கத்தாவில் உள்ள IISER-ல் CSIR ரிசர்ச் பெல்லோஷிப்-பாக பணியாற்றி வந்தேன். அப்போது பெல்ஜியத்தில் இருந்து ஆராய்ச்சி திட்டம் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் என்னால் அப்பணியில் சேர முடியவில்லை. தனியார் நிறுவனத்தில் பணி செய்வதற்கு சொந்தமாக பழ வியாபாரம் செய்வது எவ்வளவோ மேல் என கருதிய நான் இத்தொழிலில் இறங்கினேன் என்று கூறினார்.