
frind killed for affairs
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ரிஜேஷ் என்பவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது நண்பரான வசீம் என்ற இளைஞர். நான் தான் தனது நண்பரை கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் நான் மட்டுமே குற்றவாளி என்றும், தற்போது விசாரணை கைதிகளாக் இருக்கும் எனது சகோதரனையும், நண்பர்களைவும் விடுவிக்க வேண்டும் எனவும் அந்த வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார்.
ரிசார்ட் ஒன்றில் வேலை செய்துவந்த வந்த வசீமிற்கும், கொல்லப்பட்ட ரிஜேஷின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு வசீம் நண்பனின் மனைவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது பழக்கம் ரிஜேஷுக்கு தெரிந்ததால் இருவரும் சேர்ந்தே ரிஜேஷை கொலை செய்துள்ளனர்.
ரிஜேஷை கொலை செய்து வசீம் வேலைபார்க்கும் ரிசார்ட் பகுதியில் கோணிப்பையில் கட்டி சடலத்தை புதைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான வசீமை போலீசார் தேடிவந்த நிலையில், வசீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நண்பரின் மனைவியை அடைய நண்பரையே கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement