அரசியல் இந்தியா

முன்னாள் அமைச்சரின் ஆபாச வீடியோ விவகாரம்.. சிக்கலில் காவல் அதிகாரிகள்..!

Summary:

முன்னாள் அமைச்சரின் ஆபாச வீடியோ விவகாரம்.. சிக்கலில் காவல் அதிகாரிகள்..!

முன்னாள் அமைச்சரின் ஆபாச வீடியோ வெளியான வழக்கு விவகாரத்தில், அவருக்கு மறைமுக உடந்தையாக இருந்து வழக்கு விசாரணையை மந்தப்படுத்திய அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த வருடத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோலி. தன்னிடம் பணிகேட்டு வந்த பெண்ணை, தனது ஆசைக்கு இணங்க வைத்து அரசு வேலை வாங்கி கொடுக்காமல் டகால்டி கொடுத்த நிலையில், இருவரின் தனிமை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அம்மாநில அரசியலை அதிரவைத்தது. 

அதனைத்தொடர்ந்து, ரமேஷ் ஜார்கிஹோலி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பொறுப்புகளை ராஜினாமா செய்து வெளியேறிய நிலையில், அவரின் மீதான வழக்கை அம்மாநில காவல் துறையினர் முறையாக விசாரிக்க வில்லை என்ற குற்றசாட்டுகள் எழத்தொடங்கியது. 

மேலும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சமூக சேவகர் வழங்கிய புகாரையும் உயர் அதிகாரிகள் கருத்தில் கொள்ளாமல் தட்டிக்கழித்து வந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் கமல் பந்த், துணை ஆணையர் அனுசேத், காவல் ஆய்வாளர் மாருதி ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், காவல் அதிகாரிகள் தங்களின் வழிகாட்டுதல்படி புகாரை பெற்று நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த நிலையில், அனைத்தையும் சமூக சேவகர் நீதிமன்றத்தில் விளக்கியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னணியில் காவல்துறை உயரதிகாரிகள் இருப்பதாகவும் தகவல் தெரியவருவதால், முன்னாள் அமைச்சருக்கு மறைமுக உதவி செய்த அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், விரைவில் ரமேஷ் ஜார்கிஹோலியின் மீது விசாரணை திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement