இந்தியா

கடனில் தத்தளித்த விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய அதிசயம்!

Summary:

formar with in one moth got one crore


கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜுன. இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வெங்காயம் பயிரிட்டு வருகிறார். 

அதேபோல் இந்த வருடமும் மல்லிகார்ஜூன் தனது 10 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி ரூ.15 லட்சம் செலவில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 

ஆனால் தற்போது வெங்காய விலை உயர்ந்த நிலையில் அவர் தான் பயிரிட்ட வெங்காயத்தை அறுவடை செய்து விற்று வருகிறார். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மல்லிகார்ஜூன் 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரராகி உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் வெங்காயம் பயிரிடுவதற்காக கடன் வாங்கி இருந்தேன். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் கடன் தொகை உள்பட ரூ.15 லட்சத்தில் வெங்காயம் பயிரிட்டேன். கடந்த அக்டோபர் மாதம் வெங்காய விலை குறைவாக இருந்ததால் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

ஆனால் நவம்பர் மாதத்தில் வெங்காய விலை உயர்வு எனக்கு மகிழ்ச்சியடையவைத்தது என கூறியுள்ளார். பலரும் மல்லிகார்ஜூன் அடைத்த லாபத்திற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
 


Advertisement