தோசையுடன் பறக்கும் தட்டு.. முத்து அண்ணாவின் பறக்கும் தோசை.. வைரல் வீடியோ காட்சி..

தோசையை சுட்டு அதை தட்டி வைத்து வேகமாக பறக்கவிடும் மாஸ்டர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலா


Flying dosa with plat viral video

தோசையை சுட்டு அதை தட்டி வைத்து வேகமாக பறக்கவிடும் மாஸ்டர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள ஹிந்த்மாதா அடுத்த தாதர் பகுதியில் முத்து அண்ணா தோசைக்கடை என்ற பெயரில் தோசை கடை ஒன்று இயங்கிவருகிறது. இந்த சாலையோர கடையில் அந்த கடையின் மாஸ்டர் முத்து மிகவும் பிரபலம். அவர் தோசை சுட்டு பறக்கவிடும் ஸ்டெயிலை பார்க்கவே மக்கள் அந்த கடைக்கு தோசை சாப்பிட வருகின்றனர்.

மிகவும் வேகமாக தோசை சுட்டு, அந்த தோசையை தட்டில் வைத்து முத்து மாஸ்டர் பறக்கவிடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. முத்து மாஸ்டரின் இந்த ஸ்டெயிலை பார்த்த, அந்த வந்த வாடிக்கையாளர் ஒருவர், அண்ணா நீங்க ரஜினி ரசிகரா என கேட்க, அதற்கு முத்து அண்ணாவும் ஆமாம் என பதிலளிக்கிறார்.

முன்னதாக மும்பையில் இளைஞர் ஒருவர் தோசையை சுட்டு நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே பறக்கவிடும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.