இந்தியா

மத்திய அமைச்சர் உட்பட பலபயணிகள் புறப்பட தயாராக இருந்த விமானம்! விமானியின் சாமர்த்தியத்தால் மீட்கப்பட்ட விமானம்!

Summary:

flight take off aborted


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பல பயணிகள் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரியவந்ததையடுத்து விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்தநிலையில் விமான ம் புறப்படுவதற்காக ரன்-வேக்கு சென்றது.

indigo flight க்கான பட முடிவு

விமானம் பறப்பதற்குத் தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப் பதைக் கண்டுபிடித்தார் விமானி. இதனையடுத்து உடனடியாக இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த விமானி, விமானத்தை ரன்வேயில் இருந்து விமானங்களை நிறுத்துமிடத்துக்கு மீண்டும் கொண்டு சென்றார்.

இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். சரியான நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Advertisement