நாயால் வந்த வினை.. அடிதடியான வாடகை வீடு!Fight between house owner and rent person

கர்நாடகா மாநிலத்தில் வளர்ப்பு நாயால் வாடகை வீட்டார் மற்றும் வீட்டின் உரிமையாளர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், அதே வீட்டில் வாடகைக்கு இருந்தவர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் வாடகைக்கு இறந்தவர்கள் வீட்டில் நாயை வளர்த்து வந்துள்ளனர்.

House owner

ஆனால் வீட்டின் உரிமையாளர் நாய் வளர்க்க கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். இதனால், நாய் வளர்ப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையம் வரை புகார் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வாடகைக்கு இருப்பவர்ளது வீட்டிற்கு சென்ற உரிமையாளர், 4 பேருடன் வந்து நாய்க்காக வைக்கப்பட்டிருந்த கேட்டை எடுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த இளம் பெண் கேட்டை பிடுங்க முற்பட்டபோது அவரை கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.

House owner

அப்போதைய இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தியது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் நாயை வளர்த்தால் வீட்டை காலி செய்யுங்கள் என கூறியுள்ளார்.