தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
அடக்கொடுமையே... குடிக்க பணம் இல்லாததால் பெற்ற மகளையே விற்க முயன்ற தந்தை... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம், ஆலம்பூர் மண்டலம், பஞ்சேர்லா பகுதியை சேர்ந்தவர் ஜானகிராம். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜானகிராம் பயங்கரமான குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். இதன் காரணமாக அவரது மனைவி ஜானகிராமனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால் மகளை ஜானகிராமனிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். ஜானகிராமன் மகளை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து வந்துள்ளார். நந்தியாலா மாவட்டம், டான் நகரப் பகுதிக்கு மகளை அழைத்துக் கொண்டு வந்து அம்மா ஹோட்டல் சர்க்கிள் பகுதியில் பிச்சை எடுக்க வைத்துள்ளார் ஜானகிராமன்.
ஆனால் அங்கு குடிப்பதற்கு போதிய வருமானம் கிடைக்காததால் ஜானகிராமன் பெற்ற மகளையும் விற்கும் அளவுக்கு விற்கும் அளவுக்கு துணிந்து உள்ளார். அதனையடுத்து அங்குள்ளவர்களிடம் தனது மகளை ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்தார்.
ஆனால் அங்கிருந்தவர்கள் சிறுமி வாங்க முன்வராத நிலையில் ஒருவர் மட்டும் சிறுமி வாங்க ஜானகிராமனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அங்கு இருந்தவர்கள் பார்த்து போலீசுக்கு புகார் கொடுத்துள்ளனர். போலீசார் ஜானகிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.