இந்தியா

மனைவியுடன் கடும் தகராறு! மகள் கண்முன்னே தந்தை அரங்கேற்றிய கொடூரம்! பகீர் சம்பவம்!

Summary:

Father killed mother and buried alive

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்லாபலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பொன்னுரு சுபாஷினி. இவரது  கணவர் புதாபுக்கல சுவாமுலு. இவர் சுபாஷினியின் மூன்றாவது கணவர் ஆவார்.

கணவர் மற்றும் மனைவி இருவரும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருமே போதையில் இருந்தநிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவாமுலு சுபாஷினியை கடுமையாக அடித்து உதைத்துள்ளார். இதில் சுபாஷினி மயக்கமடைந்துள்ளார். 

இந்நிலையில் மயக்கத்தில் இருந்த சுபாஷினியை, சுவாமுலு இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த  சுபாஷினியின் 7 வயது மகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் அப்பொழுது தனது தந்தை, தாயை உயிருடன் இருக்கும்போதே குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபாஷினியின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள சுவாமுலு மீது வழக்குபதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement