மனைவி, மகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சித்ரவதை.. பதறவைக்கும் துயரத்தால் பேரதிர்ச்சி.!father attacked his daughter for cycle

சைக்கிள் கேட்டதற்காக மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய  பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம், தாமரசேரி பரப்பன்போயில் பகுதியில் வசித்து வருபவர் ஷாஜி. இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று ஷாஜியின் மகள் அவரிடம் சைக்கிள் கேட்டபோது முதலில் தன்னால் வாங்கித் தர இயலவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், மகள் ஆசையாக கேட்டதால் தாய் மீண்டும் அவரது கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் கோபமுற்ற ஷாஜி, மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொன்றுவிடுவேன் என கூறியுள்ளார். அத்துடன் மாலையில் வீடு திரும்பிய ஷாஜி தனது சொந்த மகள் எனக்கூட பாராமல் சிறுமியின் உடலில் கொதிக்கும் நீரை ஊற்றியதோடு மட்டுமில்லாமல், சிறுமியின் கையையும் உடைத்துள்ளார். 

KERALA

அத்துடன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தாமரசேரியில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.