16 வயது காதலி வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த காதலன்..! பெண்ணின் குடும்பமே சேர்ந்து செஞ்ச திடுக்கிடும் சம்பவம்..!

தான் ஒருதலையாக காதலித்த சிறுமிக்கு அவரது வீட்டிற்கே சென்று காதலை வெளிப்படுத்திய இளைஞரை பெண்ணின் குடும்பமே சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்தவர் 21 வயது அன்பழகன். பைக் மெக்கானிக்கான அன்பழகன் அதே பகுதியில் கடை நடத்திவந்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக பள்ளி சென்றுவந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் அன்பழகனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு என்பதால் மாணவியின் வீட்டுப்பக்கம் அவ்வப்போது சென்றுவந்த அன்பழகனை மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத அன்பழகன் மீண்டும் மீண்டும் மாணவியின் வீட்டு பக்கம் சென்றுவந்திலையில் மாணவியின் குடும்பத்தினர் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
போலீசாரும் அன்பழகனை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். அப்படி இருந்தும் அன்பழகன் தனது காதல் தொல்லைகளை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கடைக்கு சென்ற அன்பழகன் மாலை வரை வீடு திரும்பவில்லை.
அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டும் எந்த பலனும் இல்லை. இதனை அடுத்து அன்பழகனின் உறவினர்கள் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அன்பழகன் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும், கொலை குறித்து மாணவியின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அன்பழகன் நேராக தங்கள் வீட்டிற்கே வந்து தங்கள் மக்களிடம் காதலை வெளிப்படுத்தியாகவும், அப்போது நடந்த தகராறில் அனைவரும் சேர்ந்து அன்பழகனை வெட்டி கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அவர்கள் நால்வரையும் கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.