இந்தியா

டிக் டாக் வீடியோவை பார்த்து கொரோனா வைரசுக்கு மருந்து சாப்பிட்ட குடும்பம்..! 11 வயது சிறுமி உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தின் பரிதாப நிலை..!

Summary:

Family is serious after taking corono medcine seeing tik tok video

டிக் டாக்கில் வந்த வீடியோவை பார்த்துவிட்டு கொரோனா வைரஸை தடுக்க சுய வைத்தியம் பார்த்த ஒரு குடும்பமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. அதேநேரம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்துவருகிறது.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பல்லப்பள்ளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் டிக் டாக் வீடியோ ஒன்றை பார்த்துள்ளனர். ஊமத்தங்காய் சாப்பிட்டால் கொரோனா வராது என ஒருவர் லைக்குக்காக வெளியிட்ட போலி வீடியோவை நம்பி, இவர்கள் அனைவரும் ஊமத்தங்காயை சாப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தில் 11வயது சிறுமிஉட்பட பெரியோர் அனைவரும் ஊமத்தங்காயை சாப்பிட்டதை அடுத்து அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement