பேஸ்புக்கில் தற்கொலை செய்வதாக கூறி வீடியோ வெளியிட்ட இளைஞர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

பேஸ்புக்கில் தற்கொலை செய்வதாக கூறி வீடியோ வெளியிட்ட இளைஞர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!


facebook-saved-west-bengal-youth-tried-commit-sucide

மேற்குவங்காள மாநிலம் பிம்பூரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பிட்ட இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவரை நான்கு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த பேஸ்புக் நிறுவனம் உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு இளைஞரின் வீட்டை கண்டுப்பிடித்து தற்கொலை முயற்சியிலிருந்து இளைஞரை மீட்டுள்ளனர். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.