11 வருஷமாச்சு.. கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில்.! அவரது அழகிய மகனை பார்த்தீங்களா!!
#EnglandIndia: மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு வருகை தந்தது எனது பாக்கியம் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்தார்.
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று அகமதாபாத் நகருக்கு விமானத்தில் வந்தார். அதனைத்தொடர்ந்து, அவருக்கு மக்கள் மற்றும் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளார்.
#WATCH | UK Prime Minister Boris Johnson arrived in Ahmedabad earlier in the morning to start his India visit and was accorded a grand welcome at the airport
— ANI (@ANI) April 21, 2022
He will later travel to New Delhi to meet PM Modi. pic.twitter.com/7ImtyLXhNZ
அங்கிருந்து சமர்பதி ஆசிரமத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன் தனது வருகையை பதிவு செய்து மகாத்மா காந்தி குறித்து கருத்தை பதிவு செய்தார். அந்த கருத்தில், "இந்த அசாதாரண மனிதனின் ஆசிரமத்திற்கு வருவதே ஒரு பெரிய பாக்கியம். உலகத்தை சிறப்பாக மாற்றுவதற்கு அவர் எவ்வாறு உண்மை மற்றும் அகிம்சையின் எளிய கொள்கைகளை அணிதிரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வது ஒரு மகத்தான பாக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.