இந்தியா வர்த்தகம் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டிரீம் 11 தேர்வு..! எத்தனை கோடிக்கு ஒப்பந்தம் தெரியுமா.?

Summary:

Dream 11 selected as IPL 2020 Title sponsor for 222 crores

இந்த ஆண்டுக்கான ஐபில் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீன நிறுவனமான விவோ விலகியதை அடுத்து Dream11 நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஐபில் டைட்டில் ஸ்பான்ஸராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபில் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஐபில் போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஐபில் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடத்தப்படும் என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐபில் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஐபில் போட்டிக்கான புது டைட்டில் ஸ்பான்ஸர் தேர்வை BCCI அறிவித்தது.

இதில் பைஜூஸ், கொகோ கோலா, ஜியோ, ட்ரீம் 11, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம் ஆகியவை இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சரில் போட்டி போட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சராக Dream 11 தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரூபாய் 222 கோடிக்கு Dream 11 நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஐபில் டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருக்க 450 கோடி கொடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement