இந்தியா

வாக்காளர் அடையாள அட்டையில் நாய்யின் புகைப்படம்.! அதிகாரியின் கையெழுத்து..! அதிர்ச்சி தகவல்.!

Summary:

Dog photo misplaced in voter id

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவரது வாக்காளர் அடையாள அட்டையில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள சேர்ந்தவர் சுனில் கர்மாகர்(64). தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யக்கூறி அதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புது வாக்காளர் அட்டையை பார்த்த சுனில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கு காரணம், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றதோடு, அதில் அதிகாரியின் கையெப்பமும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்துளேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிகாரிகள், ஆன்லைன் விண்ணப்பம் மூலம் வாக்காளர் அட்டை தயாரிக்கும் போது இந்த தவறு நடந்துள்ளதாகவும், விரைவில் சரியான புகைப்படத்துடன் அவருக்கு அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement