பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தனது குட்டிகளை காப்பாற்ற நாகப்பாம்புடன் நாய் நடத்திய போராட்டம்!. மனதை உருக்கும் வீடியோ!.

ஒடிசா மாநிலத்தில் நாய் ஒன்று தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை வைத்துக்கொண்டு பாதுகாத்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென நாகப்பாம்பு அங்கு வந்து நாய் குட்டிகளை சீண்டியுள்ளது.
அதை பார்த்து அதிர்ந்துபோன குட்டிகளின் தாய் நாய் கடும் கோபத்துடன் பாம்புடன் சண்டைபோட்டு அதனை விரட்ட முயன்றது. அங்கு நடந்த பாசப்போர்ட்டத்தில் ஏற்பட்ட சத்தத்தில் அங்கு வந்தனர்.
அங்கு நடந்த பாச போராட்டத்தில் பாம்பு கொத்தியதில் இரு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. மீதமுள்ள 5 குட்டிகளை தாய் நாய் காப்பாற்றியது. இதனை வீடியோ எடுத்தவர்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.