வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
தான் குடிகாரனானது போதாதென நாயையும் குடிக்கு அடிமையாக்கிய ஆசாமி..! போதை நாய்க்காக பரிதவித்த அக்கம்பக்கத்தினர்..!!
போதை ஆசாமி ஒருவர் தான் குடித்து கெட்டுப்போவது மட்டுமின்றி தனது நாய்க்கும் மதுவை கொடுத்ததால் உடல்நிலை சரியில்லாத நிலையில் அக்கம்பக்கத்தினரால் நாய் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நமது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு நாம் சாப்பிடும் பொருள்களை உணவாக வைத்திருப்போம். ஆனால் சிலர் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவையும் வழங்குவர்.
அந்த வகையில் ஒரு நபர் தனது நாய்க்கு மதுபானம் ஊற்றி அடிமையாக்கி இருக்கிறார். மது போதைக்கு அடிமையானவர் தனது உடல் நலத்தை கெடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் நாயின் உடலையும் கெடுத்துள்ளார்.
இதனால் நாயின் உடல் மோசமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினரால் நாய் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.