இந்தியா

தற்கொலை செய்துகொண்ட நாய்..! எஜமானியம்மா இறந்த துக்கம் தாங்காமல் மாடியில் இருந்து குதித்து நாய் தற்கொலை.! ஆச்சரிய சம்பவம்.!

Summary:

Dog commit suicide after master death

தன்னை பாசமாக வளர்த்த உரிமையாளர் உயிரிழந்தநிலையில் அவர் வளர்த்துவந்த நாய் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து வந்த அனிதா 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது நாய் ஒன்று சாலையில் அடிபட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

உடனே அந்த நாய்யை தனது வீட்டிற்கு அழைத்துவந்து அதற்க்கு சிகிச்சை வழங்கி, அதனை தனது வீட்டில் வைத்து பாசமாக பராமரித்துவந்துள்ளார். அனிதா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் மீது தாவி, தனது பாசத்தை வெளிகாட்டிவந்துள்ளது ஜெயா என பெயரிடப்பட்ட அந்த நாய்.

இந்நிலையில் சமீபத்தில் மருத்துவர் அனிதா உடல்நல குறைவால் மரணமடைந்த நிலயில் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த அனிதாவின் உடலை பார்த்த நாய் ஜெயா அனிதாவின் உடல் மீது தாவி தனது பாசத்தை வெளிக்காட்டியுள்ளது.

ஆனால் அனிதாவிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லாததை உணர்ந்த நாய் ஜெயா சோகமாகவும், கண்ணீருடன் இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் மாடிக்கு சென்ற நாய் அங்கிருந்து கீழே குதித்துள்ளது. உடனே நாய்யை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதுகு எலும்பு உடைந்து நாய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னை பாசமாக வளர்த்து, பராமரித்த தனது உரிமையாளர் உயிரிழந்தநிலையில் நாயும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement