கை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர்: இளம் பெண்ணின் கைகளுடன் இளைஞர்..!

கை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர்: இளம் பெண்ணின் கைகளுடன் இளைஞர்..!


Doctor who made a record of hand transplant surgery

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு குஜராத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்தது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகள் தான்.

முதன் முறையாக அகமதாபாத்தில் இருந்து கை தானம் பெறப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து 4 கைகள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னை, மும்பையில் உள்ள நபர்களுக்கு அந்தக் கைகள் பொருத்தப்பட்டன. இப்போது குஜராத்தை சேர்ந்த பெண்ணின் கரங்கள் காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). இவர் 2018 ஆம் ஆண்டில் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் தன்னுடைய கைகளை இழந்தார். இது நடத்து 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்போது அவருக்கு கைகள் கிடைத்துள்ளன. அகமதாபாத்தை சேர்ந்த, மூளைச்சாவு அடைந்த மேகா கோப்ரகடே என்ற 26 வயது இளம் பெண்ணின் கைகள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இருந்து வெங்கடேசனுக்காக கொண்டு வரப்பட்டது.

கைகளை அகற்றுவதும், பொருத்துவதும் மிகவும் சவாலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை க்ளென் ஈகில்ஸ் குளோபல் ஹெல்த் ( Gleneagles Global Hospital )மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் செல்வ சீதாராமன் செய்துள்ளார். வெங்கடேசன் இன்னும் சில மாதங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.