தந்தை வழியில் சாதித்து காட்டிய தளபதி ஸ்டாலின்! உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!

தந்தை வழியில் சாதித்து காட்டிய தளபதி ஸ்டாலின்! உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!



DMK Stalin won more sheets in tamilnadu

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி நாடே காத்திருக்கின்றது. மத்தியில் ஆளும் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. 338 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 95 இடங்களிலும், மற்ற கட்சிகள் 109 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஓரிரு தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. திமுக பெரும் தோல்வியை தழுவியது.

stalin

இந்நிலையில் கலைஞர் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் சந்திக்கும் மிகப்பெரிய தேர்தல் என்றால் அது இதுதான். தனது தந்தையின் வழியில் அவரைப்போலவே அணைத்து தொகுதிகளிலும் பெரும்பாலான வாக்குகள் பெற்று சாதித்து காட்டிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அதேபோல தமிழக சட்ட மன்ற இதை தேர்தலிலும் 22 தொகுதிகளில் ஏறக்குறைய 13 தொகுதிகளில் திமுக கட்சி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.