2 நாளிலே எல்லாம் போச்சா... பூஜைக்காக ஏற்றப்பட்ட விளக்கால் வீட்டில் நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி வீடியோ...!!!
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின், இரண்டே நாட்களில் தீபாவளி பூஜையின்போது தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பூஜைக்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து தீ பரவியதே இதற்குக் காரணம் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பூஜைக்காக வாஷிங் மெஷின் மீது வைக்கப்பட்ட விளக்கு
தந்தேராஸ் பண்டிகையன்று அந்தக் குடும்பத்தினர் புதிய வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளனர். இதையடுத்து, தீபாவளி தினத்தன்று வீட்டில் பூஜை செய்தபோது விளக்கேற்றி, அதை புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின் மீது வைத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கில் இருந்து தீப்பற்றி வாஷிங் மெஷினில் பரவியுள்ளது. சிறிது நேரத்தில் இயந்திரம் முழுவதும் தீக்கிரையாகி, பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.
இரண்டே நாட்களில் எரிந்து நாசமான புதிய இயந்திரம்
வாங்கிய இரண்டு நாட்களிலேயே புதிய மின்சாதனம் தீயில் கருகியது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
यह वॉशिंग मशीन धनतेरस के मौके पर खरीदी गई थी, लेकिन
उसके दो दिन बाद दिवाली के मौके पर परिवार ने पूजा के लिए दीपक जलाकर वॉशिंग मशीन के ऊपर रख दिया,
दीपक की वजह से पूरी वॉशिंग मशीन जलकर कबाड़ हो गई। सबसे हैरानी की बात तो यह है कि इस मशीन में एक 1/2 https://t.co/6zuVkKQbkF
— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) November 12, 2026