இந்தியா லைப் ஸ்டைல்

“ஒருவரின் வெற்றிக்கு தேவை அது மட்டுமே” இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி கருத்து

Summary:

Determination is the key for success

உங்கள் வெற்றிக்கு தேவை மன உறுதியுடன் கடினமாக உழைப்பதே. அதைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி திரு. அன்சர் சாயிக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 361 வது இடத்தை பிடித்து 21 வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆனவர் அன்சர் சாயிக். மகாராஷ்டிராவை சேர்ந்த அன்சர் முதல் முயற்சியிலேயே இந்த வெற்றியை பெற்றார். இவருக்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு 22 வயதில் தேர்ச்சி பெற்ற திரு.ரோமன் சனினி தான் இளம் ஐஏஎஸ் அதிகாரி ஆக அறியப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அன்சர், தான் படிக்கும் போது அனுபவித்த கஷ்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த சமயத்தில் அவருடைய குடும்பத்தின் பொருளாதார நிலை குறித்தும் தெரிவித்தார்.

அப்போது அவர் தன்னுடைய தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் என்றும் ஒரு நாளைக்கு 100 முதல் 150 வரை மட்டுமே அவருடைய சம்பளம் என குறிப்பிட்டார். பல சமயங்களில் அவரது குடும்பத்தினர் காலை அல்லது இரவு உணவை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளனர். ஆனால் ஒருவரின் வெற்றிக்கு வறுமையோ குடும்பத்தின் நிலைமையோ தடைக்கல்லாக இருப்பதில்லை. கடின உழைப்பும் மன உறுதியுடன் போராடும் எண்ணமே ஒருவரின் வெற்றிக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றி பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் உள்ள 14 சதவிகித முஸ்லிம்களில் வெறும் 1 முதல் 2 சதவீத முஸ்லிம்களே அரசு பணியில் உள்ளனர். இது முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருக்கும் மோசமான நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement