அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
திருமணத்திற்கு மணமேடை ஏறிய மணமகன் மாரடைப்பால் மரணம்; பல் மருத்துவருக்கு நடந்த சோகம்.!
மணமேடை ஏறிய மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகரை பகுதியை சேர்ந்தவர் நவீன் உபாத்யாய். இவரின் மகன் சமீர் உபாத்யாய் (வயது 30). சமீர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு உறவினர் பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை திருமண சடங்குகள் நடைபெற்றன. மணமகன் மனமேடையை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார்.
இந்த நிலையில், மணமேடையில் இருந்து சில அடிகளே உள்ள நிலையில், மணமகன் சமீர் மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் பல் மருத்துவர் சமீர் உயிரிழந்தது உறுதியாகவே, மணப்பெண் குடும்பத்தினர் மற்றும் மணமகன் குடும்பத்தினர், நண்பர்கள் பெரும் சோகமடைந்தனர்.