நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! 137 பயணிகளின் நிலை?
விமானிகளின் கவனக்குறைவால் எத்தனையோ விபத்துகள் நடந்துள்ளது. அதேபோல, விமானிகளின் முன்னெச்சரிக்கையால் எத்தனையோ விபத்துகள் தடுக்கப்பட்டதும் உண்டு. அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.
சுமார் 137 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் ஓன்று டெல்லியில் இருந்து சென்னையை நோக்கி இன்று புறப்பட்டது. சென்னையை நெருங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் விமானத்தின் பிரேக் வேலை செய்யாததை விமானி கண்டறிந்தார்.
என்ன செய்வது என குழம்பிப்போன விமானி உடனே விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்தார். விமானியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க அனுமதி கொடுத்தனர்.
இதனை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை விமானம் தரையிறங்கிய பிறகு பிரேக் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பெரும் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.