சோலா பூரியில் இறந்து கிடந்த பல்லி; சுவையாக பொறித்து வைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!Delhi Sola Puri Died Lizard Found 

 

இன்றளவில் ஒவ்வொரு தெருவிலும் ,கடை வீதியிலும் திரும்பும் இடங்களில் எல்லாம் சாலையோர உணவகங்களின் ஆக்கிரமிப்பு என்பது அதிகரித்து இருக்கிறது. இவ்வாறான சாலையோர உணவகம் சுவைக்காகவும், தரத்திற்காகவும் ஒருகாலத்தில் பாராட்டப்பட்டது.

சாலையோர உணவகங்கள்

ஆனால், மழைக்கால ஈசல் போல இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு இன்றளவில் செயல்பட்டு வரும் சாலையோர உணவகங்கள் மற்றும் நிலையான ஹோட்டல்களில் உணவின் தரம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுகாதார ஆய்வுகளை மேற்கொள்வதும் வழக்கம்.

இதையும் படிங்க: நள்ளிரவில் திரைப்பட பாணியில் தீ விபத்து; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

பல்லியுடன் பொறித்து வழங்கப்பட்ட பூரி

இந்நிலையில், சோளா பூரியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் பொறித்து எடுக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. பிரதானமான பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சோளா பூரியில், பல்லி ஒன்று இறந்து காணப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. அதேவேளையில் சாலையோர உணவகத்தின் தரத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்தது.

இதையும் படிங்க: வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!