11 வயது சிறுமி பள்ளி கழிவறையில் வைத்து 2 மாணவர்களால் பாலியல் பலாத்காரம்; சிறுமிக்கு நடந்த பயங்கரம்.!

11 வயது சிறுமி பள்ளி கழிவறையில் வைத்து 2 மாணவர்களால் பாலியல் பலாத்காரம்; சிறுமிக்கு நடந்த பயங்கரம்.!


delhi-minor-girl-gang-abused-by-2-in-school-campus-and

பள்ளி வளாகத்தில் வைத்தே 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் 11 வயதுடைய சிறுமி 6ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியை அதே பள்ளியில் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சம்பவத்தன்று, தனது வகுப்பறைக்குள் இருந்த சிறுமியை இரண்டு மாணவர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்த நிலையில், மற்றொரு நாள் சிறுமியை கழிவறைக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இந்த துயரம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. 

delhi

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி செய்வதறியாதது திகைத்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி 2  சிறார்களை கைது செய்தனர். இதுகுறித்து குழந்தைகள் நலத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.