அதிர்ச்சி வீடியோ: மெட்ரோ இரயில் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி.. உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.!

அதிர்ச்சி வீடியோ: மெட்ரோ இரயில் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி.. உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.!


delhi-metro-girl-suicide-attempt-safely-rescued-by-cisf

மெட்ரோ இரயில் நிலையத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவரை பொதுமக்கள் மற்றும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் காப்பாற்றினார்.

டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர், மெட்ரோ இரயில் நிலையத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை அதிகாரிகள், அவரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

அவை எதனையும் கேட்காத பெண்மணி தற்கொலை செய்வதில் உறுதியாக இருந்த நிலையில், மெட்ரோ இரயில் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சுதாரித்து கீழே பொதுமக்கள் உதவியுடன் போர்வையை விரித்து வைத்து காத்திருக்க சொல்லியுள்ளனர். 

இதனையடுத்து, பெண்மணியிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, அவர் தற்கொலை முடிவில் உறுதியாக கீழே குதித்துள்ளார். கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெண்ணை பத்திரமாக போர்வையில் குதிக்கும்படி மீட்டுள்ளனர். அவருக்கு எப்படியானாலும் உடலில் காயம் ஏற்பட்டிருக்கும் என்பதால், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.