நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
டெல்லி கலவரம்: மீண்டும் அதிகரித்த பலி எண்ணிக்கை!

டெல்லியில் நடந்த வன்முறையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இறந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று காலை வரை, தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சிலர் உயிரிழந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 34 ஆக அதிகரித்துள்ளது.