இந்தியா

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட கலவரம்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Summary:

delhi issue deah increase


டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு டில்லியில் மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயரந்து உள்ளது. 

இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நடந்த வன்முறை காரணமாக  900 க்கு மேலானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 4 நாட்களில் வன்முறை தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு எந்த அழைப்புகளும் வரவில்லை என்றும், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement