அச்சோ.. உணவில் உயிருடன் நெளிந்த புழு; ஆசை ஆசையாக வாங்கி அதிர்ந்துபோன பயணி.!

அச்சோ.. உணவில் உயிருடன் நெளிந்த புழு; ஆசை ஆசையாக வாங்கி அதிர்ந்துபோன பயணி.!



delhi-girl-dietitian-kushboo-gupta-face-live-warm-on-sa

 

டெல்லியை சேர்ந்த பெண்மணி குஷ்பூ குப்தா. இவர் வேலை விஷயமாக மும்பை வந்திருந்த நிலையில், பின் இண்டிகோ விமானத்தின் மூலமாக டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். 

பெண்மணி 6E 6107 என்ற இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் டெல்லி சென்ற நிலையில், விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விட்ச் வாங்கி சாப்பிட முற்பட்டுள்ளார். 

அப்போது, உயிருடன் புழு ஒன்று நெளிந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, தனது செல்போனில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

நேற்று விமான பயணத்தின்போது நடைபெற்ற இந்த சம்பவம், பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ள பெண்மணி, இண்டிகோ நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.

இது தொடர்பான விசயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பெண்மணி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இவை தொடர்பான பிரச்சனையை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.