இந்தியா

டெல்லி மலர்சந்தையில் கிடந்த பையில் IED வெடிகுண்டு.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Summary:

டெல்லி மலர்சந்தையில் கிடந்த பையில் IED வெடிகுண்டு.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

காஜிப்பூர் சந்தையில் கண்டெடுக்கப்பட்ட ஐஇடி வெடிகுண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.

டெல்லியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஜிபூரில் மலர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மலர்சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலமாக மலர்கள் இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும். இதனால் காஜியாபூர் மலர்சந்தை எப்போதும் பரபரப்புடன் காணப்படும் நிலையில், இன்று மர்ம பை ஒன்று அங்குள்ளவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அது வெடிகுண்டு பையாக இருக்கலாம் என எண்ணி, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை செய்ததில், மர்ம பையில் IED ரக வெடிகுண்டு இருந்தது அம்பலமானது. இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை கருதி முன்னதாகவே காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, தீயணைப்பு மற்றும் அவசர ஊர்திகளும் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டன. 

வெடிகுண்டு இருப்பதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை தனிமையான இடத்திற்கு எடுத்துச்சென்று அழித்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம பை உரிய சமயத்தில் கண்டறியப்பட்டதால் உயிரிழப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement