டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது கொலை தாக்குதல் முயற்சி! ஆட்டோ டிரைவர் கைது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!



delhi-cm-attack-case

இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கூட்டத்தில் ஏற்பட்ட பதட்டம்

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பொதுமக்களின் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென மேடையை நோக்கி பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றார். இந்த திடீர் நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடத்தியவர் யார்?

போலீசார் அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் குஜராத்தின் ராஜ்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்பாய் சகாரியா ஆவார். தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வந்த அவர், அரசின் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியுடன் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! நடைபயிற்சி சென்ற எம்.பி சுதாவிடம் டெல்லியில் வைத்து நகை பறிப்பு! கழுத்தில் காயம்! பெரும் பரபரப்பு!

முதல்வரை கொல்லும் திட்டம்

விசாரணையில் மேலும், ராஜேஷ் சாதாரண தாக்குதல் அல்லாது முதல்வரை நேரடியாக கொலை செய்யும் திட்டம் உடன் வந்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கத்தியை எடுத்துக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஆனால் போலீஸ் பாதுகாப்பை கவனித்தவுடன், அந்தக் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தற்போது அந்தக் கத்தி போலீசாரால் மீட்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அரசியல் சூழலில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு எந்த முடிவுக்கு வருகிறது என்பதற்காக நாடு முழுவதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இப்படியா நடக்கனும்! துணி கடையில் டிரஸ் மாற்றும் போது 20 வயது கல்லூரி மாணவிக்கு நொடியில் நடந்த விபரீதம்! பரபரப்பு சம்பவம்..