மனைவியுடன் ஹனுமான் கோவிலுக்கு நேரில் சென்று வழிபட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.!Delhi CM Arvind Visit and pray Hanuman Temple In Cant Place 

 

டெல்லியில் நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில், அமலாக்கத்துறையால் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் நீதிமன்றம் அதற்கான அனுமதியை மறுத்தது. 

ஜாமினில் வெளியே வந்த முதல்வர்

நேற்று முன்தினம் டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்துக்கு, வீட்டில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், அக்கட்சியின் தொண்டர்கள் அதனை வெகுவாக சிறப்பித்து இருந்தனர். 

இதையும் படிங்க: 8 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரன்; உடலெல்லாம் கடித்து வைத்து சித்தரவதை.!

மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு

இந்நிலையில், இன்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காணட் பிளேஸ் பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலில் தனது மனைவி சுஜிதா கெஜ்ரிவாலுடன் நேரில் சென்று பிரார்த்தனை செய்தார்.இவர்களுடன் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவத் மானும் உடன் இருந்தார். 


 

இதையும் படிங்க: தந்தை உயிரிழந்ததால் 10 வயதில் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட சிறுவன்; உதவ முன்வந்த ஆனந்த் மகேந்திரா.!