இந்தியா Covid-19

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்த பலி எண்ணிக்கை! நேற்று ஒருநாள் மட்டும் எவ்வளவு.?

Summary:

Death increased in india

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,54,065 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 2000க்கு  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2003 பேர் பலி ஆன நிலையில், கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 903 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2003 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மேலும் 10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 3,54,065 ஆக உயர்வு.


Advertisement