இறந்துபோன தந்தையின் உடலை ஒருமுறை கூட பார்க்க முடியாத நிலையில் மகன்.! இறுதி சடங்கு செய்த மகள்.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

இறந்துபோன தந்தையின் உடலை ஒருமுறை கூட பார்க்க முடியாத நிலையில் மகன்.! இறுதி சடங்கு செய்த மகள்.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!


Daughter done funeral formalities for father

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், இறந்து போன தந்தைக்கு மகன் இறுதி சடங்கு செலுத்த முடியாத நிலையில், இறந்தவரின் மகளே தந்தைக்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் கர்நாடாகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூபலியைச் சேர்ந்தவர் அஷோக் சௌஹான் (60). உடல்நல குறைவு காரணமாக கடந்த ஞாயிற்று கிழமை அஷோக் சௌஹான் மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். உயிர் இழந்த அவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளன்னர்.

இறுதி சடங்கை செலுத்தவேண்டிய மகனோ கடக் பகுதியில் கூலி வேலைக்கு போன நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கு மாட்டிக்கொண்டார். உறவினர்கள் யாரும் வராமல் வெறும் 8 - 10 பேர் மட்டுமே இருந்த நிலையில், உடலுக்கு யார் இறுதி சடங்கு செலுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

corono

இந்நிலையில், இறந்துபோன தனது தந்தைக்கு, தானே முன்வந்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார் அவர் மகள். கொரோனா காரணமாக இறந்துபோன தந்தையின் உடலைக்கூட பார்க்கமுடியாத நிலையில் மகன், இறுதி சடங்கு செய்த மகள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.