இந்தியா

30000 செலவழித்து சொந்த ஊருக்கு சென்ற கூலி தொழிலாளியை வீட்டிற்குள் சேர்க்காத மனைவி! சோகத்தில் தொழிலாளி

Summary:

daily wager spend 30000 to reach hometown not allowed to enter home

அஸ்ஸாமில் இருந்து த்ரிபுராவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு செல்ல 30000 ரூபாய் செலவழித்து சென்ற கூலி தொழிலாளியை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் மிகுந்த மன வேதனையில் உள்ளார்.

திரிபுரா அகர்தலா பகுதியை சேர்ந்த கோபிந்த தேவநாத் என்பவர் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் அஸ்ஸாமில் இருக்கும் தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். போக்குவரத்துக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அவரால் மீண்டும் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை.

நீண்ட நாட்களாக உறவினர்கள் வீட்டிலே தங்கியிருந்த கோபிந்த தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து 30000 ரூபாய்க்கு வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்ட அவர் இரண்டு நாட்கள் பயணம் செய்து த்ரிபுராவை அடைந்தார்.

எல்லையில் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா தோற்று இல்லை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஆவலுடன் சென்ற கோபிந்திற்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆவலுடன் வரவேற்க வேண்டிய மனைவி கோபிந்தை வீட்டிற்குள் வரவேண்டாம் என்றும், அவரால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றும் காரணம் சொல்லி வீட்டிற்குள் வரவேண்டாம் என கூறிவிட்டார். மேலும் 14 நாட்கள் எங்கேயாவது தனிமையாக இருந்து விட்டு பின்னர் வருமாறு கூறிவிட்டார். இதனால் மிகவும் மன வேதனையடைந்த கோபிந்த செய்வதறியாது திகைத்து வருகிறார்.


Advertisement