
Current states of corona in india
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 3, 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70, 756 ஆக உயர்ந்துள்ளது. அதில் 22,455 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 2,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நம்பிக்கைக்குரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தாலும், பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களிலிருந்து 12.2 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது நாடு முழுவதும் கண்காணிப்பு, பரிசோதனை, சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றை இன்னும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். சொந்த ஊர் திரும்பிய அனைவரும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் வைத்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி முக்கியமாக சுவாசக் கோளாறு, இன்ப்ளூயன்சா போன்ற பாதிப்புகள் இருந்தால் கண்காணிப்பின் மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளித்து கொரோனாவை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement