
cow urine for corona
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொல்கத்தாவில் பாஜக நிர்வாகி சாட்டர்ஜி என்பவர் நேற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார், அப்போது அவர் அங்கிருந்தவர்களுக்கு மாட்டு சிறுநீர் கொடுத்து, இது கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று மக்களிடம் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், சீருடையில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருக்கும் மாட்டு சிறுநீர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊர்காவல் படையை சேர்ந்த பாதுகாவலர், இன்று காலை, சாட்டர்ஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement