இந்தியா லைப் ஸ்டைல்

ரசித்து ருசித்து பானிபூரி சாப்பிடும் பசுமாடு!! அதற்கு ஊட்டிவிடும் நபர்!! வைரல் வீடியோ..

Summary:

ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தளத

ஒரு மாடு மற்றும் அதன் கன்று பானி பூரியை ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு பானி பூரி விற்பனையாளர் ஒருவர் தெருவில் ரோட்டோரமாக கடை போட்டு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பானிபூரி கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்து பானிபூரி கேட்டுள்ளார். அந்த பானிபூரி விற்பனையாளரும் பூரிஸை காரமான தண்ணீரில் நிரப்பி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.

அதனை வாங்கிய அந்த வாடிக்கையாளர் பானி பூரிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, அருகில்  பாவமாகவும் பசியோடவும் நின்ற  மாடு மற்றும் அதன் கன்றுக்கு ஒவ்வொன்றாக அந்த விற்பனையாளரிடம் வாங்கி வாங்கி கொடுக்கிறார். அவர் கொடுக்க கொடுக்க அந்த மாடு மற்றும் கன்றும் ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement