
Covaxin human test in next one week
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டு தீபோல் பரவி வருகிறது. கொரோனாவால் உலகளவில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. முகவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு நடைமுறைகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதேநேரம், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் பல நாடுகளில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஹைதராபாத்தில் செயல்படும் பாரத் பையோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டிலையே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை இன்னும் ஒருவார காலத்திற்குள் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய நடவடிவகைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
Advertisement
Advertisement