ஆன்லைன் லோன்... 2 பிஞ்சு குழந்தைகளை கொலை செய்து தற்கொலை... வெளியான பகீர்உண்மை.!couple-who-killed-their-children-and-committed-suicide

கேரள மாநிலத்தில் குழந்தைகளை கொன்று விட்டு காதல் திருமணம் செய்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கடம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிஜோ மற்றும் சில்பா. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் வேலை இல்லாததால் மிகுந்த பொருளாதார சிக்கலில் இருந்துள்ளனர்.

KERALA

இந்நிலையில் நேற்று வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அவர்களது வீட்டிற்கு வந்து சோதனையிட்டபோது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மற்றும் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக  கிடந்தனர். இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்தன. இதனைத் தொடர்ந்து அவர்களது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

KERALA

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பொருளாதார சிக்கலில் இருந்த தம்பதியினர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருக்கின்றனர். மேலும் அவர்கள் ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் கடன் வாங்கி இருப்பது தெரிய வந்தது. இந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாததால்  அந்த ஆன்லைன் நிறுவனம்  நிஜோவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பகிர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அவமானத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.