இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது! வெளியான வேதனையான தகவல்!

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது! வெளியான வேதனையான தகவல்!


Corono vaccine research at india

கொரோனாவிற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்தியா இன்னும் துவக்க நிலையிலேயே இருப்பதாகவும் விலங்குகளிடம் சோதனை நடத்தவே இந்த ஆண்டு இறுதியாகிவிடும் என வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல்வேறு முன்னனி நாடுகளும் போராடி வருகின்றன. ஆனால் இதுவரை எந்தவித மருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Coronovirus

இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சியை அரசுடன் இணைந்து ஒருசில தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முன்னனி மருந்து நிறுவனங்களான சைடஸ் காடிலா, சீரம் இன்ஸ்டிடியூட், பயோலாஜிக்கல் E, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனலாஜிக்கல்ஸ் மற்றும் மைன்வாக்ஸ் போன்றவை கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதன்மை வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல், "இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. விலங்குகளிடம் சோதனை நடத்தவே இந்த ஆண்டு இறுதியாகிவிடும்" என கூறியுள்ளார்.