இந்தியா

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை 15 அடி ஆழ புதைகுழிக்குள் வீசியெறிந்த ஊழியர்கள்..! பதறவைக்கும் சம்பவம்..!

Summary:

Corono dead patient dead body thrown

கொரோனானால் உயிரிழந்தவரின் சடலத்தை ஊழியர்கள் சவக்குழிக்குள் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியவருகிறது. கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை புதைகுழியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் இவரது முதல் மகன் உயிரிழந்துள்ளார்.

இதனால் தனது மனைவி மற்றும் இளைய மகனை அழைத்துக் கொண்டு புதுச்சேரி கோபாலன் கடையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மட்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது மனைவி மற்றும் மகனை பார்க்க முடியாமல் அவதிப்படுவந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி சென்ற அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தநிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் இருக்கும் உறவினர்களும் இங்கு வர முடியவில்லை.

இதனை அடுத்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோபாலன் கடையில் உள்ள சுடுகாட்டில் இடம் ஒதுக்கப்பட்டது. இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், இறந்தவரின் உடலை முறையாக அடக்கம் செய்யாமல் அங்கு வெட்டப்பட்டிருந்த 15 அடி ஆழ குழிக்குள் சடலத்தை தூக்கி வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் வைரலாந்தை அடுத்து, 15 அடி ஆழ குழி என்பதாலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்ததாலும் குழிக்குள் இறங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement