கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
அதிர்ச்சி..! பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம்.. அதிர்ச்சி தகவல்.!

முன்பைவிட தற்போது 10 மடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட கொடிய வைரஸாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏறப்டுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் மிகவும் சிக்கலான மரபணு அமைப்பினால் இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்பைவிட பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் ஏற்ப்பட்ட வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரசுக்கு டி614டி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 45 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற உணவக உரிமையாளர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதியை மீறி வெளியே நடமாடிய நிலையில் அவரிடம் இருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இந்த திடீர் மரபணு மாற்றத்தால் தற்போது பரிசோதிக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி பலனளிக்காது என மலேசியா பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது சோதனையில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இந்த மாற்றம் பாதிக்காது எனவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.