12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.! எப்போதிலிருந்து தெரியுமா.?

12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.! எப்போதிலிருந்து தெரியுமா.?


corona-vaccine-for-age-12-to-14

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு மேலாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது பரிணாம வளர்ச்சியை அடைந்து ஓமிக்ரான் வைரஸாக உருப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி  16 ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. 

இதன் அடுத்தகட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வயதை தாண்டியவர்களுக்கு செலுத்த ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்தது. இதனையடுத்து அந்த வயது சிறுவர்களுக்கு நாளை (16-03-2022) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.