இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.? விலை எவ்வளவு.?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.? விலை எவ்வளவு.?


corona vaccination in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில்,  5,86,00,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி  ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத  விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

corona

இந்நிலையில் , சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், இந்த தடுப்பூசி, பொது மக்களுக்கு தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 வரை கிடைக்கும் என்று பூனவல்லா தெரிவித்துள்ளார்.