சர்வதேச விமான பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!.. மத்திய அரசு அறிவிப்பு..!!

சர்வதேச விமான பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!.. மத்திய அரசு அறிவிப்பு..!!


Corona test again for international air passengers

தற்போது பரவி வரும், உருமாறிய புதிய வகை கொரோனா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவ ஆரம்பித்ததுள்ளதால்,  இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா அமெரிக்கா போன்ற பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்தியாவிலும் மூன்று பேர் உருமாரிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த புதிய வகை தொற்று மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதுகுறித்து டெல்லியில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடியும் இந்த தொற்று குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்தது. சனிக்கிழமை முதல் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். சர்வதேச விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் இரண்டு சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் பயணிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். 

அவர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்த பிறகே அந்த பயணிகளை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .