அதிர்ச்சி தகவல்: கொரோனா வந்து குணம் அடைந்தவர்களில் 20சதவீதம் பேருக்கு மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம்

அதிர்ச்சி தகவல்: கொரோனா வந்து குணம் அடைந்தவர்களில் 20சதவீதம் பேருக்கு மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம்


Corona recover patients may develop a new mental illness

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு மனநல கோளாறு ஏற்படுவதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

தி லான்செட் சைக்காட்ரி ஜர்னல் ஒன்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த 6 கோடியே 90 லட்சம் பேரின் மின்னணு சுகாதார பதிவுகளை சோதனை செய்ததாகவும், அதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

corona

இந்த பதிவுகளின் அடிப்படையில் கொரோனாவில் இருந்த மீண்ட 5 இல் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தகைய நோயாளிகளுக்கு கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற குறைபாடுகள்  இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை அதிகாரபூர்வ தடுப்பு மருந்து வெளிவராதநிலையில் இந்த தகவல் கொரோனா நோயாளிகள் மத்தியில் மேலும் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.