கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!



corona increased india

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர் பலிகளும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே உலுக்கி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

corona

இந்தியாவில் நேற்று வரை 315 பேர் கொரோனாவால் சிக்கியிருந்தனர். டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தநிலையில், இன்று கூடுதலாக 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, நாடு முழுவதும் 324 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  கொரோனா பாதிப்பிலிருந்து 24 பேர் குணமடைந்துள்ளனர்.